search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    7-ம் வகுப்பில் திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கியது கர்நாடக அரசு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

    7-ம் வகுப்பில் திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை கர்நாடக அரசு நீக்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றதும், பள்ளி பாடங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்குவது குறித்து ஒரு நிபுணர் குழுவை அரசு அமைத்தது. அந்த குழு வரலாற்று விஷயங்களை ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை வழங்கியது.

    அதில், பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்கக்கூடாது என்று பரிந்துரை செய்தது. இதையடுத்து அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடகக்தில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை கர்நாடக அரசு நீக்கியுள்ளது. அதே நேரத்தில் மற்ற வகுப்பு பாடத்திட்டத்தில் திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கப்படவில்லை.

    7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் போராடினர். இதற்கு ஆங்கிலேயர்களிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. இது பா.ஜனதாவுக்கும் தெரியும். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை மாநில அரசு நீக்கியுள்ளது. இது சரியல்ல. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என்றார்.
    Next Story
    ×