search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வீரர் ராஜேந்திர சிங் தாமி
    X
    கிரிக்கெட் வீரர் ராஜேந்திர சிங் தாமி

    100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் கிரிக்கெட் வீரர்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் ஒருவர், 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    பிதோராகர்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர்  கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

    இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள நிலையில், அவர்களுக்கும், உள்ளூரில் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது.

    அவ்வகையில், உத்தரகாண்ட் வீல்சேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமி தனது வாழ்வாதாரத்திற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலை செய்து வருகிறார். 

    மாற்றுத்திறனாளியான அவர் இதுபற்றி கூறுகையில், ‘வீல்சேர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, எனது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு எனக்கு வேலை வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

    அவரது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு அரசு திட்டங்களின் கீழ் உடனடியாக நிதி உதவி வழங்கும்படி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் விஜய் குமார் தெரிவித்தார். 
    Next Story
    ×