என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
கேரளாவில் இன்று புதிதாக 702 பேருக்கு கொரோனா - 2 பேர் பலி
கேரளாவில் இன்று ஒரே நாளில் 702 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 702 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 745 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்மந்திரி விஜயன், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடர்ந்து வைரஸ் தீவிரமடைந்து 7 இடங்களில் மிகப்பெரிய அளவில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள்
அறிவிப்பது தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கில் மேலும் சிலதளர்வுகள் அறிவிக்கப்பட்டும் என முதல்மந்திரி தெரிவித்தார்.
Next Story