search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டிக்டாக் லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு மீண்டும் அதிரடி

    டிக்டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

    இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

    இந்த செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என செயலிகளின்  குளோன்கள் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.

    இந்த செயலிகள் அனைத்துமே இந்தியாவால் தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் கீழ் இயங்கும் பிரதியாகும்.  

    இந்நிலையில், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன செயலிகளிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
        
    இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    47 சீன செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×