search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகாஷ் ஜவடேகர்
    X
    பிரகாஷ் ஜவடேகர்

    சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை - காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி மறுப்பு

    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மந்திரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஒரு தொழிற்சாலையோ, திட்டமோ தொடங்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படுவது அவசியம். இதனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியாதநிலை இருந்தது.

    இதற்கிடையே, இதில் சில தளர்வுகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்த அறிக்கை இல்லாமலேயே திட்டங்களை ஆரம்பிக்கலாம். இதுதொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 11-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

    இதற்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்துக்கும், நலனுக்கும் எதிராக அமையும் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிராகரித்துள்ளார். 
    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், ஜெய்ராம் ரமேஷ் கூறியவை தவறான புரிதலின் அடிப்படையில் கூறிய தவறான குற்றச்சாட்டுகள். மத்திய அரசின் முடிவுகள் அனைத்தும் பாராளுமன்றம் மற்றும் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கு உட்பட்டவை.

    தற்போது, பொதுமக்கள் கருத்துக்காக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்மீது வரும் யோசனைகள் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×