search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிராஜ் 2000 ரக போர் விமானம்
    X
    மிராஜ் 2000 ரக போர் விமானம்

    1999-ல் மிராஜ் முதல் 2020-ல் ரபேல் வரை நமது கூட்டணி புதிய உச்சதிற்கு செல்கிறது - இந்தியாவுக்கு பிரான்ஸ் வாழ்த்து

    1999-ல் மிராஜ் முதல் 2020-ல் ரபேல் வரை என நமது கூட்டணி புதிய உச்சத்திற்கு செல்வதாக இந்தியாவுக்காக பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:  
           
    கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

    இதற்கிடையில், கார்கில் போரின் போது இந்தியாவுக்கு இஸ்ரேல் தனது முழு ஆதரவை அளித்தது. அதேபோல் பிரான்ஸ் நாடும் இந்தியாவுக்கு போர் விமானங்களை வழங்கி ஆதரவு அளித்தது.

    குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானம் கார்கில் போரில் திரும்பு முனையாக அமைந்தது. 

    இஸ்ரேல் வழங்கிய லேசர் குண்டுகளை பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் 2000 போர் விமானத்தில் பொருத்தி பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா வீசியது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் உருகுலைந்தன. கார்கிலில் இந்தியா வெற்றிபெற இந்த மிராஜ் ரக போர் விமானத்தில் பங்கு முக்கியமானதாகும்.

    அதேபோல் தற்போது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 அதிநவீன ரபேல் ரக போர் விமானத்தை பெற உள்ளது. அதன் முதல் பகுதியாக 6 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், கார்கில் வெற்றியின் 21 ஆவது ஆண்டு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் கார்கில் வெற்றிக்கு பிரான்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

    இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லினன் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , ’’கார்கில் வெற்றி நாளான இன்று இந்திய பாதுகாப்பு படையினருக்கு பிரான்ஸ் மரியாதை செலுத்துகிறது. இந்தியாவுடன் எப்போது பிரான்ஸ் இணைந்து செயல்படும். 1999 ஆம் ஆண்டு மிராஜில் இருந்து 20202 ரபேல் வரை நமது கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது’’ என்றார்.

    Next Story
    ×