search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கர்நாடகத்தில் ஒரே நாளில் 5,030 பேருக்கு கொரோனா தொற்று

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று மட்டும் 5,030 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.  கர்நாடக மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகத்தில் இன்று 5,030 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் பலியாகி உள்ளனர்.  மொத்த பலி எண்ணிக்கை 1,616 ஆக உயர்ந்துள்ளது.  

    அதே சமயம் இன்று 2,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 29,310 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 49,931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 640 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 
    Next Story
    ×