search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் இருந்து விலக அதிகாரிகளுக்கு இந்திய விமானப்படை அறிவுறுத்தல்

    இந்திய விமானப்படை அதிகாரிகள் ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் இருந்து விலக வேண்டும் என விமானப்படை அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ‘டிக்டாக்’ உள்பட 59 சீன செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த நிலையில் இந்திய விமானப்படை அதிகாரிகள் ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் இருந்து விலக வேண்டும் என விமானப்படை அறிவுறுத்தி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானப்படை அதிகாரிகள் ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் எந்தவொரு சேவையிலும் அங்கம் வகிப்பது தடை செய்யப்படுவதாக விமானப்படை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ராணுவ வீரர்கள் பேஸ்புக், டிக்டாக், ஸ்னாப்சாட் உள்ளிட்ட 89 செயலிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    தொலை தூரத்தில் இருக்கும் உறவினர்களுடன் பேச சமூக வலைத்தளம் உதவியாக இருக்கிறது. இதனால் அதற்கு தடைவிதிக்க கூடாது என ராணுவ அதிகாரி ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தடையை நீக்க மறுத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×