search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தலைநகர் டெல்லியில் இன்றும் இடி மின்னலுடன் மழை

    தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பரவமழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக பீகார், அசாம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் இன்றும் அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. 

    குடியரசு மற்றும் சுதந்திர தின அணிவகுப்புகள் நடைபெறும் ராஜ்பாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.     

    Next Story
    ×