search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருப்பதியில் கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு (வயது 67) திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்திக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? அல்லது தொடரலாமா? என்பது பற்றி ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×