search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 3 பேர் பலி

    காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
    காஷ்மீர்:

    காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கிடையில் எல்லையில் உள்ள கிராமங்கங்களை குறிவைத்து பாகிஸ்தான் தரப்பு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர்..

    இந்நிலையில், எல்லையோரமுல்ல காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கோல்பூர் கிராமப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறு ரக பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினர். 

    பாகிஸ்தான் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் கோல்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்தார்.  

    இந்த தாக்குதலையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்து சென்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்கபதிலடி கொடுக்கப்பட்டது. பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Next Story
    ×