search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் நிருபம்
    X
    சஞ்சய் நிருபம்

    சிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் அழிந்துவிடும்: சஞ்சய் நிருபம் காட்டம்

    சிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்
    மும்பை :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் சமீபத்தில் கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர்கள் செய்த நில மோசடி குறித்து விசாரணை நடத்தவேண்டும் என சமீபத்தில் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் சஞ்சய் நிருபம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கட்சி தலைமைக்கு வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து சஞ்சய் நிருபம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சிவசேனா கட்சியின் தலைவர்கள் நிலமோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மும்பை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர். சிவசேனாவுக்கு எதிராக நான் பேசினால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையா? அப்படியானால் மும்பை காங்கிரசும், சிவசேனாவும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டதா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் அதில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த அரசாங்க விளம்பரத்தையும் அவர் இணைந்துள்ளார். இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித் பவார், தொழில்துறை மந்திரி திலீப் வால்சே, திறன் மேம்பாட்டு மந்திரி நவாப் மாலிக் மற்றும் மந்திரி சுபாஷ் தேசாய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் மராட்டிய அரசின் ஒரு அங்கம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்த அரசாங்க விளம்பரத்தில் காங்கிரஸ் எங்கே? சிவசேனாவை காதலிக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், சிவசேனாவுக்கு முன் மண்டியிடுவதற்கு பதிலாக, அந்த கட்சியை எதிர்த்துப் போராடுங்கள், இல்லையெனில் காங்கிரஸ் அழிந்துவிடும்” என்றார். 
    Next Story
    ×