search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்மா வழங்கும் நபர் (கோப்பு படம்)
    X
    பிளாஸ்மா வழங்கும் நபர் (கோப்பு படம்)

    பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மான தானம் அளித்தால், அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருத்து கண்டுபிடிக்கவில்லை. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் டெல்லி அரசு முதன்முதலாக பிளாஸ்மா வங்கியை தொடங்கியது. தற்போது 2-வது வங்கியை ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் பிளாஸ்மா வங்கியை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் அசாம் மாநில அரசு பிளாஸ் தானம் அளிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகையில் ‘‘
    ஒரு நபர் ஒரு முறை 400 கிராம் பிளாஸ்மா தானமாக அளிக்க முடியும். இதை வைத்து இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிளாஸ்மா சிகிச்சை மட்டும்தான் பக்க விளைவு இல்லாது, 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது.

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றிய பயமுறுத்தும் அனுபவத்தை அனுபவித்தவர் மற்றும் நோயுடன் போராடுவதில் மருத்துவத் தொழிலாளர்களின் அயராத முயற்சிகளை நேரில் கண்டவர். பிளாஸ்மா செல்களை நன்கொடையாக அளிப்பதன் மூலம் தங்கள் பணியைச் செய்வதற்கான ஒரு மனிதாபிமான அழைப்பாக அதைக் கண்டறிய வேண்டும்.

    சுகாதாரத்துறை மந்திரியான எனது கையெழுத்துடன் பிளாஸ்மா தானம் அளித்தவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உதாரணத்திற்கு இரண்டு பேர் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தார், அதில் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்திருந்தால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என்றார்.
    Next Story
    ×