search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் (கோப்பு படம்)
    X
    தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் (கோப்பு படம்)

    தப்லீக் ஜமாத் மாநாடு விவகாரம்: இந்தோனேசியாவைச் சேர்ந்த 92 பேருக்கு ஜாமீன்

    அரசின் வழிபட்டு நெறிமுறைகளை மீறி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய நாட்டினருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமான அதிகரித்தபோது டெல்லியில் தப்லீக் ஜாமத் மாநாடு நடைபெற்று கொண்டிருந்தது. இதில் சுமார் 34 வெளிநாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மசூதிகளுக்கும் சென்றனர்.

    தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதனால்தான் கொரோனா தொற்று இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் விசா நடைமுறைகளை மீறி மிஷனரி நடடிவடிக்கையில் ஈடுபட்டதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களில் இந்தோனேசியாசைச் சேர்ந்த 92 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 13-ந்தேதி கிர்கிஸ்தானைச் சேர்ந்த 85 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×