search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடிந்து விழுந்த பாலம்
    X
    இடிந்து விழுந்த பாலம்

    பீகாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது

    பீகாரில் கடந்த மாதம் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்த ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

    ஆற்றங்கரையோர கட்டுமானங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் மற்றும் சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 


    இந்நிலையில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்பட்ட சத்தர்காட் பாலம் நேற்று இடிந்து விழுந்தது. காங்டாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இதனை பார்க்க அப்பகுதிக்கு வந்த மக்கள், ஆபத்தை உணராமல் பாலத்தின் மீது நின்று ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. 

    பாட்னாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்த பாலம் ரூ.260 கோடி செலவில் 1.4 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×