search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு
    X
    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு

    கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்: கர்நாடக சுகாதார மந்திரி

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் மற்ற மாநிலங்கள் பல்வேறு தளர்வுகள் அளித்தன. இதனால் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவில் தற்போது அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் குஜராத்தை பின்னுக்குத்தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி பி. ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீராமுலு கூறுகையில் ‘‘உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் ஆளுங்கட்சியனரா, எதிர்க்கட்சியனரா, பணக்காரரா, ஏழையா என்று வைரஸ் பாகுபாடு பார்க்காது.

    இன்னும் இரண்டு மாதங்களில் பாதிப்பு 100 சதவீதம் உயரும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அரசாங்கத்தின் அலட்சியம் அல்லது அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மை அல்லது அமைச்சர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிக்கொண்டே இருக்க முடியும். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. கடவுளால் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும்’’ என்றார்.

    கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 47,253 ஆக உயர்ந்துள்ளது. 928 பேர் பலியாகியுள்ளனர்.
    Next Story
    ×