search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு- ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

    டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து உள்ள நிலையில், ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் டெல்லி முதல் மந்திரி நன்றி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    டெல்லியில் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதம் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. ஜூலை 15ந்தேதி வரை 2.25 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், கூட்டு முயற்சி காரணமாக, கணிக்கப்பட்டதற்கு பாதி அளவிலேயே பாதிப்புகள் உள்ளன. இன்று டெல்லியில் 1.15 லட்சம் பாதிப்புகள் உள்ளன.  கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக டெல்லி அரசு தனித்து போராட முடிவு செய்திருக்குமென்றால், நாங்கள் தோல்வியையே அடைந்திருப்போம்.

    அதனாலேயே, மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மத அமைப்புகள் உள்பட அனைவரிடமும் உதவி கேட்டோம்.  கொரோனாவுக்கு எதிரான போரில் ஆதரவு அளித்த பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    டெல்லியில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை வைத்து நாம் மனநிறைவு கொள்ளக்கூடாது. நாம் நமது முன்னெச்சரிக்கை நோய்த்தடுப்பு பணிகளை தொடருவோம்.

    தற்போதைய நிலவரப்படி 18600 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. தினமும் 20 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை சாம்பிள்கள் சோதனை செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×