search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    'உண்மையை தோற்கடிக்க முடியாது’ - பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் டுவீட்

    ராஜஸ்தான் மாநில துணை முதல் மந்திரி பதவில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் ’உண்மையை தோற்கடிக்க முடியாது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்தார். ஆனால் எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே நேற்றும், இன்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சச்சின் பைலட் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள வேண்டும் கலந்து கொள்ள வேண்டும் என கொறாரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    ஆனால், இந்த கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, ராஜஸ்தான் மாநில துணைமுதல் மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய இரு பதவிகளில் இருந்தும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்சபட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் துணைமுதல் மந்திரி மற்றும் மாநில காங்கிரஸ் பதவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து சச்சின் பைலட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ உண்மை தொந்தரவு செய்யப்படலாம், ஆனால் உண்மையை தோற்கடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுய விவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநில துணை முதல் மந்திரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய இரண்டு பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

    சச்சின் பைலட் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த சச்சின் பைலட்டின் பெயர் பலகை அகற்றப்பட்டு கட்சியின் மாநில தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோவிந்த் சிங் டாடஸ்ராவின் பெயர் பலகை வைக்கப்பட்டுளது.

    Next Story
    ×