search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடுகள்
    X
    காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடுகள்

    உ.பி.: மந்திரி வசிக்கும் தெருவில் உள்ள வீடுகளுக்கு வலுக்கட்டாயமாக காவி பெயிண்ட்

    உத்தர பிரதேசத்தில் மாநில மந்திரி வசிக்கும் தெருவில் ஒரு கும்பல் அனைத்து வீடுகளுக்கும் காவி பெயிண்ட் அடித்த சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
    உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தில் உள்ள ஒரு தெரிவில் அம்மாநில மந்திரி நந்த கோபால் நந்தி வசித்து வருகிறார். நேற்று இவர் வசித்து வரும் தெரிவில் ஒரு கும்பல் அனைத்து வீட்டின் சுவற்றிலும் காவி பெயிண்ட் அடித்தனர். பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கும்பல் கேட்காமல் தொடர்ந்த காவி கலரை அடித்துக் கொண்டிருந்தனர். சிலர் புகார் தெரிவிப்பதற்காக செல்போனில் படம் பிடிக்கும்போது கலர் ஸ்பிரே அடித்து விரட்டினர்.

    காவி கலர் பா.ஜனதா கட்சியை குறிக்கும் என்பதால் அந்தத் தெரிவில் வசிக்கும் நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குப்தா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

    ‘‘இவர்களின் செயல் ரவுடிகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது’’ என ஒருவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

    ‘‘நான் அவர்களிடம் நிறுத்துங்கள் என்று கூறியபோது, இடத்தை விட்டு செல்லுங்கள் என்று மிரட்டினர்’’ என்றார் மற்றொருவர்.

    காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடுகள்

    இதுகுறித்து குப்தா உத்தர பிரதேச மாநில மந்திரி நந்த கோபால் நந்தியின் உறவினர் மீது புகார் அளித்துள்ளார். ‘‘ஒரு குடிமகனாக எனது அடிப்படை உரிமை சிதைக்கப்படக் கூடாது. என்னை அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். நான் ஒரு வணிகர். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. என்னுடைய வீடு காவி கலரில் இருக்க விரும்பவில்லை. நான் அவர்கள் செயலுக்கு எதிர்க்கும்போது என்னை தாக்கி, வலுக்கட்டாயமாக பெயின்ட் அடித்து விட்டார்கள்’’ என்றார்.

    காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட வீடுகள்

    ஆனால் மந்திரி கோபால் நந்தி கூறுகையி்ல ‘‘வழக்குப்பதிவு செய்தது சதி. அடிக்கப்பட்டது முற்றிலும் காவி கலர் அல்ல. ரெட், க்ரீன், சாக்லேட் கலர் கூட இருந்தது. அழகு படுத்துதலை சிலர் விரும்பவில்லை. அவர்கள் வளர்ச்சி பணிக்கு எதிரானவர்கள்.

    இந்த பிரச்சினையை பெரிதாக்கினால் அரசியல்வாதியாகி விடலாம் என நினைக்கிறார்கள். என்னுடைய தெருவில் மட்டும் இந்த பணி நடைபெறவில்லை. பிரயாக்ராஜ் முழுவதும் நடைபெறும் வளர்ச்சி பணி’’ என்றார்.
    Next Story
    ×