search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டதாக வந்த செய்தி முற்றிலும் பொய்: பிரியங்கா காந்தி

    அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவர் 1997-ல் இருந்து டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு வசிப்பவர்களுக்கு உயர்பாதுகாப்பு வழங்கப்படும்.

    பிரியங்கா காந்தியின் எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக இயலாது. ஆகவே பங்களாவை ஆகஸ்ட் 1-ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    ஆனால் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்து கூடுதல் அவகாசம் கேட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. அவகாசம் கேட்கவில்லை என்று பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்

    இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘இது பொய்யான செய்தி. அரசுக்கு நான் இதுபோன்ற வேண்டுகோள் விடுக்கவில்லை. எனக்கு ஜூலை 1-ந்தேதி இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 1-ந்தேதிக்குள் பங்களாவை காலி செய்து விடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×