search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

    எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் பங்கேற்க சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

    தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-மந்திரிக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது. 

    இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.

    கட்சிக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசோக் கெலாட் சச்சின் பைலட் பெயரை உச்சரிக்காமல் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள்  ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ‘‘நாங்கள் சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்கிறோம். இன்று அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் ஒன்றிணைந்து, தலைமைப்பு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் வாக்களித்துள்ள நிலையில், நாங்கள் எல்லோரும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட விரும்புகிறோம்’’ என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×