search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ஆழ்கடலில் இந்திய வான்படை ஹெலிகாப்டர்கள் என கூறி வைரலாகும் புகைப்படம்

    ஆழ்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் ஹெலிாகாப்டர் ஒன்றின் புகைப்படம் இந்திய வான்படைக்கு சொந்தமானவை என வைரலாகி வருகிறது.



    இந்திய வான்படை சார்பில் பாங்கோங் சோ ஏரியினுள் அபாச்சி ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவை சீன அத்துமீறல்களை முறியடிக்க ஏதுவாக தயார் நிலையில் இருப்பதாகவும் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தண்ணீருக்கு அடியில் நிறுத்தப்பட்டுள்ளது.  

    இந்திய அபாச்சி ஹெலிகாப்டரின் ரகசிய அம்சம், இந்திய வான்படை இவற்றை தண்ணீருக்கு அடியில் நிறுத்தி வைத்திருபதன் மூலம் அம்பலமாகி உள்ளது. இவற்றில் உள்ள 2x4 டோர்பெடோஸ் மற்றும் லாங்போ சோனார் உள்ளிட்டவை ஏரியினுள் வரும் சீன நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்க முடியும் என வைரல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படம் மற்றும் தகவல்களை ஆய்வு செய்த போது, அவற்றில் பெரும்பாலான தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படம் இருப்பது ஜார்டன் ஆழ்கடல் ராணுவ அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டது ஆகும். 

    இந்திய வான்படை சார்பில் அபாச்சி ஹெலிகாப்டர்கள் லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது உண்மை தான் என்றாலும், இவை தண்ணீருக்குள் இயங்கும் திறன் கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது இந்திய ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் இல்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×