search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா ராகுல் காந்தி
    X
    அமித்ஷா ராகுல் காந்தி

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு: அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்திற்கு கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் பயிற்சி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாகவும், இந்த போரை உறுதியுடனும், ஆர்வத்துடனும் தொடர்ந்து கொரோனாவை தோற்கடிப்போம் என்றும் கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கடந்த 7 நாட்களில் சராசரியாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையும் தென் கொரியா, நியூசிலாந்து நாடுகளில் பாதிப்பு குறைந்து வருவதையும் காட்டும் வரைபடத்தை தனது ‘டுவிட்டர்’ பதிவில் வெளியிட்டு உள்ளார்.

    அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போரில் இதுதான் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
    Next Story
    ×