search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கடத்தல் தங்கம்
    X
    ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கடத்தல் தங்கம்

    பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு, கடந்த ஆண்டும் 27 கிலோ தங்கம் கடத்திய ஸ்வப்னா - என்.ஐ.ஏ. தகவல்

    பயங்கரவாத செயல்களுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 27 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தியுள்ளதாகவும் என்.ஐ.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது பயங்கரவாத நிதி திட்டல், பயங்கரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், பயங்கரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ.) தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.    

    என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவில் ஸ்வப்னா தரப்பு நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல் தங்கம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதே தவிர நகை செய்ய அல்ல. 

    இந்த குற்றத்தில் ஈடுபட ஏதுவாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் போலியாக முத்திரைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

    குற்றவாளிகள் இதேபோன்று 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை தங்க கடத்திலில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருமுறை 18 கிலோ, மற்றொரு முறை 9 கிலோ என மொத்தம் 27 கிலோ எடையிலான தங்கம் கடத்தியுள்ளனர் என என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×