search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லும் காட்சி
    X
    உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லும் காட்சி

    தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற அவலம்

    கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் உடலை எப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்துள்ள நிலையில் அவல சம்பவம் நடைபெற்றுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று என்ற கொடிய நோய் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

    கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் இறந்தவர்களின் உடல்களை நெருங்கிய உறவினர்கள் தவிர மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. உடல்களை தொட அனுமதி கிடையாது. பாதுகாப்பு கவசம் அணிந்து ஆம்புலன்ஸ் மூலம் அடக்கம் செய்யும் இடத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

    ஆனால் ஆங்காங்கே சில அவலம் நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. மூலம் உடல்களை குழுயில் தூக்கி வீசுவது, தரதரவென்று இழுத்துச் செல்வது, ஒரு குழயில் பல உடல்களை புதைப்பது என நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானாவில் ஆட்டோவில் இறந்தவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட அவல சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லும் காட்சி

    இதுகுறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனை டாக்டர் கூறுகையில் ‘‘இறந்தவரின் உறவினர் மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறார். அவர் எங்களிடம் உடலை எடுத்துச் செல்வதாக கூறினார். அவர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்கவில்லை’’ என்றார்.

    என்றாலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது.
    Next Story
    ×