search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ‘வாட்ஸ்அப்’ மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    ஊரடங்கு காரணமாக வழக்குகளில் சம்மன் மற்றும் நோட்டீஸ் போன்றவை அனுப்புவதற்கு இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் போன்றவற்றை கோர்ட்டுகள் பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் நீதித்துறையும் தப்பவில்லை. வக்கீல்கள், வழக்குதாரர்கள் என நீதித்துறையிலும் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது. பின்னர் நடுவர் மன்ற விசாரணைகள் மற்றும் காசோலை மோசடி வழக்கு விசாரணைக்காக சில தளர்வுகளை அறிவித்தது. இதைப்போல வழக்குகளில் சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்புவதற்கும் சில விதிமுறை தளர்வுகளை நேற்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.

    வாட்ஸ்அப்


    அதன்படி அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தாக்கல் செய்த மனு ஒன்றில் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், ‘ஊரடங்கு காரணமாக வழக்குகளில் சம்மன் மற்றும் நோட்டீஸ் போன்றவை அனுப்புவதற்கு தபால் நிலையங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மேற்படி சேவைகளுக்கு இ-மெயில், பேக்ஸ் அல்லது உடனடி தகவல் சேவைகளை (வாட்ஸ்அப்) போன்றவற்றை கோர்ட்டுகள் பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது.
    Next Story
    ×