search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைசூரு அரண்மனை
    X
    மைசூரு அரண்மனை

    ஒட்டக பராமரிப்பாளர் மகனுக்கு கொரோனா - மைசூரு அரண்மனை 3 நாட்கள் மூடல்

    மைசூரு அரண்மனையில் வளர்க்கப்படும் ஒட்டகத்தின் பராமரிப்பாளர் ஒருவரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அரண்மனை 3 நாட்கள் மூடப்பட்டது.
    மைசூர்:

    சுற்றுலா நகரமான மைசூரு டவுனில் பிரசித்தி பெற்ற மைசூரு அரண்மனை உள்ளது. இங்கு யானை, ஒட்டகம், குதிரை உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிக்க ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரண்மனையின் பின்புற மண்டபத்தின் அருகில் தங்கியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒட்டக பராமரிப்பாளரின் மகன் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

    இதனால் மைசூரு அரண்மனை முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒட்டக பராமரிப்பாளரின் மகனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை 3 நாட்கள் மைசூரு அரண்மனை மூடப்படுகிறது என்று அரண்மனை வாரிய துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஒட்டகத்தை பராமரிப்பவரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மைசூரு அரண்மனை 3 நாட்கள் மூடப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாகரஒலே, பந்திப்பூர் வனச்சரணாலயங்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மூடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×