search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோட்டத்தில் தனிமையில் தங்கியுள்ள ராணுவ வீரர்
    X
    தோட்டத்தில் தனிமையில் தங்கியுள்ள ராணுவ வீரர்

    சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் தோட்டத்தில் தனிமையில் தங்கியுள்ளார்

    லடாக் எல்லையில் வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவர் கொரோனா பரவலை தொடர்ந்து தன்னை தோட்டத்தில் தனிமைப்படுத்தி கொண்டார். இதற்காக அவரை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
    கதக்:

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடும் சம்பவங்களும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் வீட்டு தனிமையில் இருந்து வெளியே சுற்றி திரிவதும் அதிகரித்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க கதக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர், சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    கதக் மாவட்டம் இந்தூரா பென்டூரா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கைஹர். இவர் இந்திய ராணுவத்தில் 14 ஆண்டுகளாக 39-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். சமீபமாக அவர் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய-சீனா எல்லையான லடாக்கில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2-ந்தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்.

    கதக் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராணுவ வீரரான பிரகாஷ் கைஹர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதாவது அவர் தனது தோட்டத்தில் டிராக்டரின் பின் தொட்டியை கூடாரமாக்கி அங்கு வசித்து வருகிறார்.

    இதற்கிடையே லடாக்கில் வேலை பார்த்து திரும்பிய ராணுவ வீரர் பிரகாஷ் கைஹருக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அவர் தோட்டத்திலேயே தனிமையில் தங்கி இருந்து வருகிறார். கொரோனா பரவி வரும் நிலையில் தன்னால் குடும்பத்தினரும், கிராம மக்களும் பாதித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவரை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
    Next Story
    ×