search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் -பிரதமர் மோடி நம்பிக்கை

    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    லண்டனில் இன்று தொடங்கிய இந்தியா குளோபல் வீக் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பொருளாதாரத்துக்கு எதிரான வலுவான போரை இந்தியா நடத்தி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை அரசு வழங்கியிருக்கிறது. சமையல் எரிவாயு,  உணவுப் பொருட்கள், கடன் ஆகியவை மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    உலகில் உள்ள பெருநிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீடுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேளாண், பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பாக உள்ளன. 

    லட்சக்கணக்கான மக்களுக்கு வலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் வந்து இந்தியாவில் முதலீடு செய்து தொழில் தொடங்க, அழைப்பு விடுக்கிறோம். 

    இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×