என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமலை - திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்8 July 2020 4:14 PM IST (Updated: 8 July 2020 4:14 PM IST)
ஏற்கனவே 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர், இசை கலைஞர், பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 17 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு, ஸ்விம்ஸ் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் தினமும் 100 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்த பரிசோதனையில் பாலாஜிநகரில் வசிக்கும் பொதுமக்கள், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் உள்பட 14 பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், சமையலர் என மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருப்பதி, திருமலையில் கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் ஸ்பிரேயர் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறுகையில், தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தரிசனத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், என்றார்.

Next Story
×