search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது கவலைக்குரியது: சிவசேனா

    கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பது கவலைக்குரியது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
    மும்பை :

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருந்த ரஷியாவை முந்தி அந்த இடத்திற்கு இந்தியா சென்றிருப்பது கவலைக்குரியது. நிதி வல்லரசாக மாற வேண்டும் என கனவு காணும் நாட்டில் 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது மற்றும் தீவிரமானது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் முதலிடத்திற்கும் செல்ல நேரிடும்.

    மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 21 நாளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை (மார்ச் மாதத்தில்) தெரிவித்து இருந்தார்.

    ஆனால் நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. கொரோனா வைரஸ் பரவல் இன்னும் நீடிக்கிறது. இந்த வைரசை எதிர்த்து போராடுபவர்கள் சோர்வடைந்துள்ளனர். அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், போலீசார், சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நாட்டிற்கும், மாநிலங்களுக்கும் நல்லதல்ல.

    கொரோனா வைரசுக்கு 2021-க்கு முன்னர் தடுப்பூசி கிடைக்காது. அதுவரை நாம் கொரோனாவுடன் வாழ வேண்டியிருக்கும். ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடிக்கும். ஊரடங்கை விலக்கும் போதும் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும். மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். ஆனால் இந்த வைரசின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. தொழில்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×