search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலாய் லாமா, மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு
    X
    தலாய் லாமா, மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு

    85-வது பிறந்த நாள் - தலாய் லாமாவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு வாழ்த்து

    திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய் லாமா நேற்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “14-வது தலாய் லாமாவின் 85-வது பிறந்த நாளில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எனது ஆழ்ந்த மரியாதை, பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களை வழங்குகிறேன். அவரது மதிப்புகள் மற்றும் லட்சியங்கள் முழு மனிதகுலத்திற்கும் அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தை நோக்கி வழிகாட்டும் ஒளி” என தெரிவித்துள்ளார்.

    மத்திய மந்திரிகளில் கிரண் ரிஜ்ஜு மட்டுமே தலாய் லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் தலாய் லாமாவுக்கு மத்திய மந்திரி ஒருவர் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×