search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ராம் தாக்குர்
    X
    ஜெய்ராம் தாக்குர்

    அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத கேஸ் இணைப்பு - இமாசல் முதல் மந்திரி பெருமிதம்

    இந்தியாவிலேயே இமாசலில் தான் முதல் முறையாக 100 சதவீத வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது என முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
    சிம்லா:

    இமாசல பிரதேசம் தலைநகர் சிம்லாவிலிருந்து இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இமாசல கிரிஹினி சுவிதா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவிலேயே இமாசலில் தான் முதல் முறையாக 100 சதவீத வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மாநில அரசு இமாசல கிரிஹினி சுவிதா யோஜனாவை அறிமுகப்படுத்தியது.

    எரிபொருளுக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    மேலும், சமையலறை புகையின் மோசமான விளைவுகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றியது மட்டுமின்றி, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவியது என தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் பயனாளிகளும் முதல் மந்திரியுடன் உரையாடினர்.
    Next Story
    ×