search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 20 ஆயிரத்தை கடந்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 425 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் 6,97,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,53,287 சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,24,433 குணமடைந்துள்ளனர். 19,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×