search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    சுப்ரீம் கோர்ட்டில் காணொலி விசாரணைக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு

    சுப்ரீம் கோர்ட்டில் காணொலி மூலமாக முறையீடு, பட்டியலிடுதல் மற்றும் விசாரணை தொடர்பாக அமல்படுத்த வேண்டிய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இணையம் மூலமாக மனு தாக்கல் செய்தல், காணொலி மூலமாக முறையீடு, பட்டியலிடுதல் மற்றும் விசாரணை தொடர்பாக அமல்படுத்த வேண்டிய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கு விசாரணைகள் காணொலி அமர்வில் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே பட்டியலிட முடியாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் இன்று முதல் காணொலி அமர்வுகளில் பட்டியலிடப்படும். வருகிற 13-ந் தேதியில் இருந்து தேவையின் அடிப்படையில் சார்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், மற்ற நாட்களில் இறுதி விசாரணைக்கான மனுக்களும், ஏற்கனவே விசாரணையில் உள்ள மனுக்களும் பட்டியலிடப்படும்.

    தற்போதைக்கு தேசிய தகவல் மையத்தின் வழியாக செயல்படும் ‘விட்யோ’ செயலி மூலம் காணொலி வழியாக வழக்குகள் விசாரிக்கப்படும். காணொலி செயல்படாத நிலையில் ‘டெலி கான்பரன்ஸ்’ வழியாக வழக்குகள் விசாரிக்கப்படும். காணொலி அமர்வுகளில் ஆஜராகும் அனைவரும் உடை, பின்னணி விஷயங்களில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×