search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய ரிசர்வ் போலீஸ் - கோப்புப்படம்
    X
    மத்திய ரிசர்வ் போலீஸ் - கோப்புப்படம்

    திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல் - அவகாசம் கேட்கும் சி.ஐ.எஸ்.எப்

    திருநங்கைகளை அதிகாரிகளாக பணியமர்த்த ஆயுதப்படைகள் ஒப்புதல் அளித்த நிலையில் தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.ஐ.எஸ்.எப். தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிலக பதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி.), சஹஸ்த்ர சீமா பால்(எஸ்.எஸ்.பி) ஆகிய 5 துணை ராணுவ படைகள் உள்ளன.

    இந்த 5 படைப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அதிகாரி பணியிடங்கள் வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி 5 துணை ராணுவப் படைகளிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    அதன்படி சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., ஐ.டி.பி.பி, மற்றும் எஸ்.எஸ்.பி. ஆகிய 4 படைகளும் தங்களது கருத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துவிட்டன. பாலின சமத்துவ கொள்கையை பின்பற்றுவதால் திருநங்கைகளை அதிகாரிகளாக எடுத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அந்த படைகள் தெரிவித்துள்ளன. அதேசமயம் திருநங்கைகளை பணியில் அமர்த்துவது குறித்து விவாதிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என சி.ஐ.எஸ்.எப். தெரிவித்துள்ளது.
    Next Story
    ×