search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவைப்படுகிறது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

    டெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவைப்படுகிறது என்றும், தற்போது 9900 கொரோனா படுக்கை காலியாக இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநில பட்டியலில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. இதனால் மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவை தடுக்கும் பணியில் டெல்லி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    தனிமைப்படுத்தும் படுக்கைகள் இல்லாததால் தற்காலிகமாக 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாமை தயார் செய்தது. இதற்கிடையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ‘‘மிகமிக குறைந்த மக்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. மிகமிக அதிகமான மக்கள் வீட்டிலேயே குணமடைந்து விடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் 2300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனை வரவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்கள் 6200-ல் இருந்து 5300 ஆக குறைந்துள்ளது. தற்போது 9900 கொரோனா படுக்கை காலியாக உள்ளது’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×