search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்கரி
    X
    நிதின் கட்கரி

    இந்தியா மிகப்பெரிய மார்க்கெட், திறன்வாய்ந்த மனித சக்தியை பெற்றுள்ளது: நிதின் கட்கரி

    இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளதோடு, திறன்வாய்ந்த மனித சக்தி, மூலப்பொருட்களையும் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இந்தியா சுயசார்பு நாடாக திகழ வேண்டும். மற்ற நாடுகள்தான் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கி வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லடாக் எல்லைக்கு மோதலுக்குப் பிறகு சுயசார்பு நாடு என்ற குரல் வலுத்து வருகிறது. சீனாவின் 59 செயலிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான துறைகளில் சீனாவின் பங்கீட்டை ரத்து செய்துள்ளது. பயன்படுத்தமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

    பெரும்பாலான உற்பத்திக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் வருகிறது. இதை இந்தியா எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளது. திறன்வாயந்த மனிதசக்தி உள்ளது. மூலப்பொருட்கள் கிடைக்கிறது. அதிக வேலைவாய்ப்பு மற்றும் வறுமையை ஒழிக்க அரசு வளர்ச்சி மற்றும் தொழில்சார்பில் கவனம் செலுத்துகிறது.

    பிலிப் தலைநகரில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட முதலீட்டார்கள் மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான முதலீட்டார்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர். இந்தியாதான் முதலீடு செய்ய பாதுகாப்பான இடம் என்று தெரிவித்தனர்’’ என்றார்.
    Next Story
    ×