என் மலர்

  செய்திகள்

  இந்தியா - சீனா மோதல் விவகாரம்
  X
  இந்தியா - சீனா மோதல் விவகாரம்

  சீனாவை விரிவாக்கவாதியாகப் பார்ப்பது ஆதாரமற்றது: சீன தூதரகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  14 அண்டை நாடுகளுடன் எல்லையை கொண்டிருக்கும் சீனாவை விரிவாக்கவாதியாகப் பார்ப்பது ஆதாரமற்றது என இந்தியாவுக்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
  இந்தியா, பூடான், நேபாளம் உள்பட 14 நாடுகளுடன் சீனா நிலப்பரப்பில் எல்லைகளை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கொண்டுள்ளது. சீனா எப்போதுமே தனது எல்லையை விரிவாக்கம் படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக ஒரு குற்ற்சாட்டும் உண்டு.

  இந்திய எல்லையில் அடிக்கடி ஊடுருவி அதன்பின் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சீன ராணுவம் பின்வாங்குவது பலமுறை நடைபெற்றுள்ளது.

  கடந்த மாதம் 15-ந்தேதி லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் கடுமையான மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  சம்பவம் நடைபெற்ற பின் ராணுவ கமாண்டர், வெளியுறவுத்துறை மந்திரி, ராணுவ அதிகரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சம்பவத்தை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ளும் என்று சீனா தப்புக்கணக்கு போட்டது.

  ஆனால் இந்தியா லடாக் எல்லையில் மேற்கொண்ட கட்டமைப்புகளை தொடர்ச்சியாக செய்து வந்தது. மேலும், ராணுவ டாங்கியை அனுப்பி வைத்தது. ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது. இதற்கிடையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடி லடாக் சென்று மோதல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடுமையாக பேசியுள்ளார்.

  இந்த விவகாரத்தில் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

  ராணுவ அடிப்படையில் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், பொருளாதார அடிப்படையிலும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது. சீன நிறுவனங்களை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. அதிரடியாக சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா அதிரடி தடைவிதித்து. இந்தியாவின் இந்த முடிவு கவலை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

  இந்நிலையில் சீனாவை விரிவாக்கவாதியாகப் பார்ப்பது ஆதாரமற்றது என்று இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஜி ரோங் கூறுகையில் ‘‘சீனா தனது 14 அண்டை நாடுகளில் 12 உடன் அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் எல்லைகளை நிர்ணயித்து, நில எல்லைகளை நட்பு ஒத்துழைப்பு பத்திரங்களாக மாற்றியுள்ளது. அண்டை நாடுகளுடனான அதன் மோதல்களை மிகைப்படுத்தி, இட்டுக்கட்டி சீனாவை விரிவாக்கவாதியாகப் பார்ப்பது ஆதாரமற்றது’’ என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×