search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 93 லட்சத்தை நெருங்கியது

    இந்தியாவில் நேற்று மட்டும் 2.41 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 6.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 20903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 379 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18213 ஆக உயர்ந்துள்ளது. 379892 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

    நேற்று வரை மொத்தம் 92,97,749 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 2,41,576 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    Next Story
    ×