search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    பீர் உற்பத்தி ஆலையில் 12 ஆண்டுகள் ஊழியர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் வைரல்

    பீர் உற்பத்தி ஆலை ஒன்றில் அதன் ஊழியர் 12 ஆண்டுகள் செய்த காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவின் ஃபோர்ட் காலின்ஸ் பகுதியில் இயங்கி வரும் புட்வெய்சர் பிரீவரி எக்ஸ்பீரியன்ஸ் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பீர்களில் சிறுநீர் கழித்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

    வைரல் தகவலை ஆய்வு செய்ததில், அது பொழுதுபோக்கிற்காக கற்பனை தகவல்களை செய்தியாக வெளியிடும் வலைதளத்தில் இருந்து வைரலாக துவங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வலைதளத்திலேயே அதில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு முரணானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
    மே 8, 2020 இந்த செய்தி, புட்வெய்சர் ஊழியர் 12 ஆண்டுகளாக பீர் டேன்க்குகளில் சிறுநீர் கழித்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் எனும் தலைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வைரலாகியுள்ள இந்த செய்திக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் புட்வெய்சர் பிரீவசரி பொது மேலாளர் நிக் மில்ஸ் ஆவார்.

    அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள தகவல் கற்பனையில் எழுதப்பட்ட ஒன்று என்பதும், உண்மையில் ஊழியர் பீர் டேன்க்குகளில் சிறுநீர் கழிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×