search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    UPI
    X
    UPI

    ஜூன் மாதத்தில் UPI மூலம் 1.34 பில்லியன் பரிமாற்றங்கள்: 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை

    கொரோனா அச்சுறுத்தலால் ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்துள்ள நிலையில், UPI மூலம் 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடைபெற்றது.
    மனித வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக வேலைகளை செய்து கொள்ளும் வகையில் செயலிகளை உருவாக்கியுள்ளது.

    வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் காலம் மாறி, ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் வசதி உருவானது. அதன்பின் ஆன்லைன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களது அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை மாற்றும் வசதி வந்தது.

    அதன்பின் PayTM, GooglePay பொன்ற நிறுவனங்கள் ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிருந்து செல்போன் மூலம் பணத்தை நொடிக்குள் அனுப்பும் இணைப்பாளராக செயல்படும் செயலிகளைஉருவாக்கியது.

    ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்களில் பெரும்பாலானோர் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவின் தேசிய பணவழங்கீடு கார்பரேசன் (NPCI) UPI-ஐ (Unified Payments Interface) என்ற செயலியை அறிமுகம் செய்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிக அளவில் வெளியே செல்வதில்லை். பெரும்பாலானவற்றிக்கு ஆன்லைனை பயன்படுத்துகிறார்கள். இதனால் UPI மூலம் நடைபெறும் பரிமாற்றம் கடந்த ஜூன் மாதம் 1.34 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சுமார். 2.62 லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் 8.94 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 999.57 மில்லியன் பரிமாற்றம் நடைபெற்றிரந்தது. மே மாதம் அது 1.23 பில்லியனாக உயர்ந்தது. அதன்மூலம் 2.18 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
    Next Story
    ×