search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராம் யெச்சூரி
    X
    சீதாராம் யெச்சூரி

    இலவச ரேஷன் பொருள்: பிரதமரின் அறிவிப்பு போக்குகாட்டும் வேலை- சீதாராம் யெச்சூரி கருத்து

    கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது மற்றொரு போக்குகாட்டும் வேலை என்றும், புதிதாக அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.
    புதுடெல்லி :

    பிரதமர் மோடி  தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகையில், கொரோனா பாதிப்பு காரணமாக நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது மற்றொரு போக்குகாட்டும் வேலை என்றும், புதிதாக அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.

    “கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, 14 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று மோடி கூறினார். செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும் போது 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மீதம் உள்ள 5 கோடி விவசாயிகளின் நிலைமை என்ன?” என்றும் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்குவதால் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்றும், எனவே தலா 10 கிலோ வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வங்கி கணக்கில் தலா ரூ.7,500 செலுத்த வேண்டும் என்றும் சீதாராம் யெச்சூரி கேட்டுக்கொண்டு உள்ளார்.

    கொரோனாவால் 14 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்தது பற்றி பிரதமர் தனது உரையில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×