search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
    X
    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

    2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் - மம்தா பானர்ஜி

    மேற்குவங்காளத்தில் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் ஜூலை 1-ந்தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து போன்றவைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    இந்நிலையில் பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். திருமண விழாவில் 50 பேர் கலந்து கொள்ளவும், இறுதிச் சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை எழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு பொருட்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
    Next Story
    ×