search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பாஜக சொல்வது ஒன்று செய்வது வேறு... மேக் இன் இந்தியா திட்டம் மீது ராகுல் கடும் தாக்கு

    மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் பாஜக, சீனாவில் இருந்து பொருட்களை அதிகம் இறக்குமதி செய்வதாக ராகுல் காந்தி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா-சீன எல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நாடு முழுவதும் கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டம் மீது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என பாஜக சொல்கிறது, ஆனால் சீனாவில் இருந்து வாங்குகிறது’ என்று கூறி உள்ளார்.

    ராகுல் வெளியிட்ட வரைபடம்

    அத்துடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தின்போது சீனப் பொருட்கள் இறக்குமதி சதவீதத்தை ஒப்பீடு செய்து வரைபடத்தையும் இணைத்துள்ளார். 

    அதில், 2008 முதல் 2014 வரை, சீனாவிலிருந்து இறக்குமதி 14 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சியின் போது, சீனப்பொருட்கள் இறக்குமதி 18 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×