search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜி
    X
    நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காள அரசு மீது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

    முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசு மத்திய அரசின் அனைத்து மக்கள் சார்பு கொள்கைகளையும் எதிர்த்து வருகிறது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
    கொல்கத்தா :

    கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்‘ திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முறையில் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் இந்த திட்டத்தின் பயனை பெற முடியாது என்றும் இதற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசே காரணம் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். காணொலி காட்சி வாயிலாக மேற்கு வங்காள மாநில மக்களிடம் உரையாற்றியபோது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்தத் தரவையும் வழங்காததால் ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்‘ திட்டத்தின் பயனாளியாக மேற்கொள்ள முடிந்தது உருவாக்க முடியவில்லை. முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசு மத்திய அரசின் அனைத்து மக்கள் சார்பு கொள்கைகளையும் எதிர்த்து வருகிறது. தங்கள் மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தரவுகளை 6 மாநிலங்கள் பகிர்ந்துள்ளன. ஆனால் மேற்கு வங்காளம் அதனை செய்யவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள யாரையும் இந்த திட்டத்தில் இணைக்க முடியவில்லை. 
    Next Story
    ×