search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூசுப் மேமன்
    X
    யூசுப் மேமன்

    1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் உயிரிழப்பு

    1993-ம் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யூசுப் மேமன் இன்று உடல்நலம் சரியில்லாமல் உயிரழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    மும்பை மாநகரில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம்தேதி 12 இடங்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

    இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் டைகர் மேமன் என்றாலும், தாவூத் இப்ராஹிமின் சதித்திட்டத்தால்தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    தாவூத் இப்ராஹிம் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில், டைகர் மேமனும் தலைமறைவாக உள்ளார்.

    டைகர் மேமனின் ஒரு சகோதரர் யாகூப் மேமன். இவர் கடந்த 2015-ல் தூக்கிலிடப்பட்டார். ஆயுள் தண்டனை பெற்ற மற்றொரு சசோதரர் யூசுப் மேமன் என்பவர் மும்பை நாசிக் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    57 வயதாகும் யூசுப் மேமன் நெஞ்சு வலிப்பதாகவும், மூச்ச விட சிரமமாக இருப்பதாகவும் இன்று காலை தெரிவித்துள்ளார். உடனடியாக வரை மாவட்ட அரசு மருத்துவனையில் 10.45 மணியளவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அப்போது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்ததற்காக சரியான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக உடல் துலேயில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×