search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாக்குதல் குற்றவாளி யூசுப் மேமன்
    X
    மும்பை தாக்குதல் குற்றவாளி யூசுப் மேமன்

    1993 மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளி சிறையில் மரணம்

    1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளிகளில் ஒருவனான யூசுப் மேமன் சிறையில் உயிரிழந்தான்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 12-3-1993 அன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். 

    இந்த தாக்குதல் தாவூத் இப்ராகிம், யாக்கூப் மேமன், டைகர் மேமன், சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர் அன்வர் பாபு ஷேக் உள்ளிட்ட பல பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.

    இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உள்ளிட்ட பயங்கரவாதிகல் பாகிஸ்தானுக்கு தப்பிச்சென்றனர். அவர்களை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடைய யாக்கூப் மேமன், யூசும் மேமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு 2015 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்ப்பட்டது. 

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய டைகர் மேமனின் மற்றொரு சகோதரன் யூசுப் மேமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவன் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் சிறையில் அடைக்கப்பட்டான். 

    இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த யூசுப் மேமன் (வயது 54) இன்று சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டான் என நாசிக் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    யூசுப் மேமனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து சிறைத்துறை தரப்பில் தற்போது வரை எந்த விளக்கும் கொடுக்கப்படவில்லை.

    Next Story
    ×