search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைக்கிள் பேரணியில் பங்கேற்ற திக்விஜய் சிங்
    X
    சைக்கிள் பேரணியில் பங்கேற்ற திக்விஜய் சிங்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி- திக்விஜய் சிங், 150 காங். தொண்டர்கள் மீது வழக்கு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்திய திக்விஜய் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    போபால்:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெல்லியில் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியது. டீசல் 80.02 ரூபாயாகவும், பெட்ரோல் 79.92 ரூபாயாகவும் உள்ளது.

    பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தும் செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர், பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தினர். ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். எனவே, திக்விஜய் சிங் மற்றும் கட்சியினர் 150 பேர் மீது போலீசார் 5  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×