search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜித் பவார்
    X
    அஜித் பவார்

    இந்தியர்கள் சீன பொருட்களை பயன்படுத்த கூடாது: அஜித் பவார் அறிவுறுத்தல்

    இந்தியர்கள் சீன பொருட்களை பயன்படுத்த கூடாது. 125 கோடி மக்கள் இதை செய்தால், சீனா திருத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
    மும்பை :

    கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து மராட்டிய அரசு சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரத்து 20 கோடி மதிப்பில் செய்து கொண்ட 3 ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்து உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சீனாவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் இந்தியர்கள் சீன பொருட்களை பயன்படுத்த கூடாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘‘நமக்கு தீமைகள் செய்யும் நாடுகளுக்கு எதிராக நாம் கடுமையான நிலையை எடுக்க வேண்டும். குடிமக்கள் சீன பொருட்களை பயன்படுத்த கூடாது. 125 கோடி மக்கள் இதை செய்தால், சீனா திருத்தப்படும்" என்றார்.
    Next Story
    ×